உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு 500 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மிக் போர் விமான கொள்வனவில், 14 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த உதயங்க வீரதுங்கவிற்கெதிராக சிவப்பு அறிவித்தல் விடுவிக்கப்பட்டு, சர்வதேச காவல்துறையின் உதவியும் கோரப்பட்டிருந்த நிலையில், அண்மையில் டுபாயிலிருந்து இவர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இலங்கையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தமது அன்றாட உணவிற்காக கையேந்தும் நிலை காணப்படுகின்ற இந்நிலையில், அரசியல் அழுத்தத்தால், நீதிமன்றம் இவரை பிணையில் விடுவித்துள்ளமை இலங்கையின் ஜனநாயகத்தன்மையில் அவநம்பிக்கை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

Latest articles

Similar articles