இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தளர்த்தப்படுகிறது.

நாளை (20/04) திங்கள் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை – கொழும்பு, – கம்பஹா, – களுத்துறை, – புத்தளம், – கண்டி, – கேகாலை, – அம்பாறை மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது.

இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் பின்வரும் காவல்துறை பிரிவுகளைத் தவிர ஏனைய பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் புதன்கிழமை (22/04) காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை தளர்த்தப்படும்

– கொழும்பு : தெஹிவள, கல்கிசை, பம்பலப்பிட்டிய, மருதானை, கொட்டஹேனா, கிராண்ட்பாஸ், கொகுவள, கெசல்வத்தை, கொத்தட்டுவ, வெல்லம்பிட்டிய

– கம்பஹா : ஜா-எல, கொச்சிகடை, சீதுவ

– களுத்துறை : பேருவள, அளுத்கம, பண்டாரகம, பயகால

– புத்தளம் : மாரவில, புத்தளம், வென்னப்புவ

கண்டி, கேகாலை, அம்பாறை மாவடங்களில் உள்ள வறக்காப்பொல, அலவத்தகொட, அக்குறன, அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுகள் தவிர ஏனைய பிரிவுகளில் திங்கள் (20/04) காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் வகுப்புகள், திரையரங்குகள் தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும்.

முழுமையான விபரங்களைப் பார்வையிட (ஆங்கிலத்தில்) இங்கே அழுத்தவும்

Latest articles

Similar articles