புதினம்

கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகக்கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பமான மக்கள் ஆர்ப்பாட்டம், இன்றும் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. கொழும்பில் பெய்துவரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை நாட்டின் வளங்கள், திறைசேரி என சுரண்டக் கூடிய அனைத்தையும் சுரண்டி, ராஜபக்ச சகோதரர்கள் இலங்கையை பொருளாதாரரீதியில் சீரழித்து,...

இங்கிலாந்து பிரதமர் உக்ரேனுக்கு விஜயம் 🎥

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் போர் இடம்பெறும் உக்ரேனுக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டார். உக்ரேன் தலைநகர் கிய்வில் பிரதமர் ஸெலென்ஸ்கியுடன் சந்திப்பையும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சில இடங்களையும் பார்வையிட்டார். தனது விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொரிஸ் ஜோன்ஸன், இந்த விஜயம் உக்ரேனிய மக்களுக்கான எமது ஆதரவைக் காட்டுவதாக அமைகின்றது. மேலும் உக்ரேனிய பிரதமர் ஸெலென்ஸ்கி ஒரு...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார்

பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எதிராக கொண்டுவர்ப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் முன்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார். இம்ரான் கானும், அவரது கட்சியினரும் வெளியேறிய பின்னர் நம்பிகையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து இயங்குவதாக குற்றம் சுமத்திய இம்ரான் கான், ரஷ்யா மற்றும் சீனா...

அமெரிக்கா பயணமாகும் இலங்கை பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் வரும் 18ம் திகதி (18/04/2022) அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஐந்து நாட்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் D.Cஇல் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கோத்தபாய அரசின் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி, புதிதாக நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளர் K.M.M.சிறிவர்த்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...

கொழும்பு காலி முகத்திடலில் திரளும் மக்கள்

மூன்று நாட்கள் பாராளுமன்றம் கூடி அரசாங்கமும், எதிர்க்கட்சியினரும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டும், அரசியலில் எவ்வித மாற்றமோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. மக்களுக்கும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. எனவே மக்களின் போராட்டங்கள் இந்த வாரமும் தொடரும் என்பது திண்ணம். இன்றும் நாடு முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பு காலி முகத்திடலில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம்...

இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு முன்மொழிவு

நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தணிப்பதற்காகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கையை மறுபடி சீராக்கவும், மக்கள் தமக்கு விரும்பிய அரசை தெரிவு செய்யும் நிலையை உருவாக்குவதற்காகவும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை, அரசாங்கத்தில் இருந்து பிரிந்து தனித்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளனர். சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள்...

மக்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஹரின்

நேற்று (08/04) பாராளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ, ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகும்வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளார். அரச தரப்பினரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அரசாங்கமோ, ஜனாதிபதியோ பதவி விலகப் போவதில்லை எனத் தெரிகிறது. எனவே மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், இவர்கள் பதவி விலகி போகும்வரை தொடர்ச்சியாக...

மருத்துவ சங்கம் எச்சரிக்கை – இலங்கையில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

இலங்கை மருத்துவமனைகளில் மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் காரணிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அவரச கடிதம் எழுதியுள்ளது. அரச மருத்துவமனைகளில் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவ சங்கம், ஜனாதிபதியுடனான அவசர சந்திப்பிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. விரைவில் மருத்துவப் பொருட்கள்...

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் பிரதி ஆணையாளராக பதவி வகித்திருந்த நந்தலால் வீரசிங்க, சிறந்த ஆளுமையுடைவர் என்பதாலேயே ஜனாதிபதி அவரை ஆளுநராக நியமித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்த்தன என்பவரை ஜனாதிபதி நியமித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், நாடு...

அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறத் தடை

பொதுமக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டார் எனும் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மையாகவும் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால் இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 18ம் திகதிவரை அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதுடன், 18ம் திகதி அவர் நீதிமன்றில்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img