புதினம்
National news
சனத் ஜெயசூரியாவும் இணைந்தார் 🎥
புதினம் -
இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரியா நேற்று (15/04) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி, அரசாங்கத்திற்கெதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இவரின் வருகை அங்கிருந்த பல இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்திருந்ததை இந்த கானொளி மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான மாவன் அத்தப்பத்து, ரொஷான்...
National news
எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு – CPC
புதினம் -
இன்று முதல் (15/04) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இதற்கமைய அதிகபட்சமாக,மோட்டார் சைக்கிள்கள் 1,000 ரூபாய்க்கும், முச்சக்கர வண்டிகள் 1,500 ரூபாய்க்கும், கார் வான் ஜீப் போன்ற வாகனங்கள் 5,000 ரூபாய்க்கும் எரிபொருளை நிரப்ப முடியும். பேருந்துகள், பாரவூர்திகள், உழவு இயந்திரங்கள் மற்றும் வணிகம் சம்பந்தப்பட்ட...
National news
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை – ரஞ்சன் ராமநாயக்கா
புதினம் -
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கா தனக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரா தெரிவித்துள்ளனர். நேற்று (14/04) புது வருடத்தை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரினும், மனுஷவும் ரஞ்சன் ராமநாயக்காவை சிறையில் சென்று சந்தித்தனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, ரஞ்சன்...
Articles
மக்களோ தெருவில், அரசியல்வாதிகளோ ஆராய்ச்சியில்
புதினம் -
பாரிய பொருளாதார பின்னடைவால் இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மக்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள் ராஜபக்ச அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். இலங்கை மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள இலங்கை மக்கள் ராஜபக்ச சகோதரர்களின் அரசிற்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால்...
National news
தென்பகுதி கடலில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு
புதினம் -
தேசியப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, இரு வாரங்களாக இலங்கை மற்றும் சர்வதேச கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய தேடுதலில், பெருமளவு போதைப் பொருட்களுடன் படகு ஒன்று காலி கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கடத்தல் முறியடிப்பு நடவடிக்கையில், சுமார் 6,200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 300kg ஹெரோயின் மற்றும் 25kg ஐஸ் வகைப் போதை பொருட்கள்...
National news
பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்பு
புதினம் -
இலங்கையில் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடின் காரணமாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் நாடு பூராகவும் 67 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 10,115 லீற்றர் டீசல், 5,690 லீற்றர் பெற்றோல், 5,620 லீற்றர் மண்ணெண்ணெய் போன்றன மீட்கப்பட்டுள்ளதுடன், பதுக்கலில் ஈடுபட்ட...
National news
உலக வங்கியின் உடனடி உதவி
புதினம் -
அவசர மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கி உடனடி உதவியாக 10 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலதிக மருந்துப் பொருட்களின் கொள்வனவு மற்றும் எரிவாயு இறக்குமதிக்கென, மேலும் 500 மில்லியன் டொலர்கள் வரும் இரு வாரங்களுக்குள் உலக வங்கி வழங்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
National news
மே மாதம் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் – ரணில்
புதினம் -
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். இந்திய வழங்கிய கடன் - வரி (credit line) பயன்படுத்தப்பட்டு முடிவடையும்போது, இம்மாத இறுதியில் அல்லது மே மாதம் இரண்டாம் கிழமை மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனியொரு நாடாக இலங்கைக்கு...
World News
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப்
புதினம் -
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஆவார். சிறந்த அரசியல் அனுபவம் உள்ள ஷெபாஸ் ஷெரீஃப், மூன்று முறை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். மேலும் இவர் மீது ஹவாலா வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சில காலம் சிறைவாசமும் அனுபவித்துள்ள...
Local news
இதுவரை 39 தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்
புதினம் -
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அதீத விலை உயர்வு என்பன பல குடும்பங்களை பட்டினிபோடும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில், இதுவரை 39 தமிழ் மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்குச் சென்றுள்ளதாக இந்தியப் பத்திரிகை ஹிந்து தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்து குடும்பங்களைச்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
