புதினம்
National news
காலிமுகத்திடல் கலவரத்தை வழிநடத்தியவரின் வீடு தீக்கிரை
புதினம் -
இன்று(09/05) காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளை நெறிப்படுத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் வீடு முற்றாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த எனப்படும் பல குற்றவியல் பின்னணியுள்ளவரின் வீடே முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கோட்டா கோ கம இளைஞர்கள் தாக்கப்படும்போது, பல இளைஞர்கள் சனத் நிஷாந்த அங்கு இருப்பதாகவும், அவரே கலவரத்தை வழி...
National news
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்கொலை!
புதினம் -
பிந்திய இணைப்பு : அமரகீர்த்தி அத்துக்கொரள அடித்தே கொல்லப்பட்டுள்ளார் என அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முழுமையான செய்தியைப் பார்வையிட இங்கே அழுத்தவும். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கொரள தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் அவரின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்துள்ளனர். பீதியடைந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது...
National news
மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார்
புதினம் -
எதிர்பார்க்கப்பட்டது போலவே இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவையும் இராஜினாமா செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி விரைவில் முடிவெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்று கொழும்பில் இடம்பெற்ற கலவரத்தால், மற்றைய கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பான முடிவுகள் எதுவும் இதுவரை...
National news
காலிமுகத்திடலில் இராணுவம் குவிப்பு, சவேந்திர சில்வா களத்தில்
புதினம் -
காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தையடுத்து, இராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளார். ஜனாதிபதியின் விசுவாசியான இராணுவத் தளபதி, பொதுஜன பெரமுனவின் காடையர்களிடமிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாக்க களத்தில் இறங்கியுள்ளார் போலும். மேலும் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளதாலும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாலும் இராணுவ பிரசன்னம்...
National news
காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்
புதினம் -
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோ கம' பகுதியில் உள்நுழைந்த 'ராஜபக்ச' அணியின் காடையர் கூட்டம் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டுள்ளன. இதுவரையில் 178பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து ராஜபக்ச அணியின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவரே கலவரத்தை வழிநடத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். காடைத்தனத்தில் ஈடுபட்ட...
National news
‘மைனா கோ கம’ அடித்து நொருக்கப்பட்டது 🎥
புதினம் -
அலரி மாளிகையின் முன்னால் மகிந்தவின் ஆதரவு அணிக்கும், மகிந்த எதிர்ப்பு அணிக்குமிடையில் கைகலப்பு மூண்டுள்ளதால் அவ்விடத்தில் பதற்றம் தோன்றியுள்ளது. மகிந்தவின் உரை முடிந்த பின்னர், அலரிமாளிகையிலிருந்து வெளியே வந்த பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களினால் (காடையர்களினால்) 'மைனா கோ கம' பகுதியில் உடமைகள் நாசாப்படுத்தப்பட்டு தீ மூட்டப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுணவின் ஆதரவாளர்கள் என்னும் பெயரில் காடையர்களே அலரி...
National news
பொதுமக்களுக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார் – மகிந்த
புதினம் -
'மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாது' என சில நூற்றுக்கணக்கான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அலரிமாளிகையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மத்தியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறிது நேரம் உரையாற்றினார். "பொதுமக்களுக்காக எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்காகவும், எந்தவொரு அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள நான் தயார்"...
National news
பிரதமரிடம் இருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம்
புதினம் -
பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் பதவி விலகல் அறிவிப்பாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் சில தடவைகள், தான் பதவி விலக முடியாது எனவும், முடியுமாயின் பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படியும் பிரதமர் எதிர்க்கட்சியினரிடம் கூறியிருந்தார். ஆனால் இம்முறை நிலைமை மாற்றமடைந்துள்ளது. பல மூத்த அரசியல்வாதிகள் பிரதமர் பதவி விலகுவதற்கு...
National news
ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சி! 🎥
புதினம் -
ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதற்காகவே அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்...
Articles
ஏன் அவசரமாக அவசரகாலச் சட்டம்?
புதினம் -
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து (06/05) மறு அறிவித்தல்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும். ஜனாதிபதியின் இந்த சடுதியான முடிவிற்கு நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் மற்றும் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவை காரணங்களாகக் இருக்கலாம் எனக் கூறப்படுகின்றபோதிலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
