பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்கொலை!

பிந்திய இணைப்பு : அமரகீர்த்தி அத்துக்கொரள அடித்தே கொல்லப்பட்டுள்ளார் என அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முழுமையான செய்தியைப் பார்வையிட இங்கே அழுத்தவும்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கொரள தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் அவரின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்துள்ளனர். பீதியடைந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிச் சுட்டுவிட்டு அருகிலுள்ள கட்டடம் ஒன்றை நோக்கி ஓடியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்தக் கட்டத்தில் அவர் இறந்து இருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். அவரின் பாதுகாப்பு அதிகாரியும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் பயபீதியில் தலைமறைவாகியுள்ளனர்.

அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இலங்கையில் பிரதமரோ, நீதி அமைச்சரோ இல்லை. நிலமை மேலும் மோசமடைந்தால், ஜனாதிபதி இராணுவத்தின் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலை உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles