பிரதமரிடம் இருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம்.

பெரும்பாலும் பதவி விலகல் அறிவிப்பாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் சில தடவைகள், தான் பதவி விலக முடியாது எனவும், முடியுமாயின் பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படியும் பிரதமர் எதிர்க்கட்சியினரிடம் கூறியிருந்தார்.

ஆனால் இம்முறை நிலைமை மாற்றமடைந்துள்ளது. பல மூத்த அரசியல்வாதிகள் பிரதமர் பதவி விலகுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகளுடனான ஜனாதிபதியின் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் என்பன பல அரசியல்வாதிகளின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நகர்வு எதிர்க்கட்சியினரையே பணிய வைத்துள்ளது.

இருப்பினும் தினேஷ் குணவர்த்தன மற்றும் ஜி.எல் பீரிஸ் போன்ற மூத்த சிங்கள அரசியல்வாதிகள் மகிந்தவின் பதவி விலகல் தற்போதைய பிரச்சனைக்கு தீர்வாகாது எனவும் தெரிவித்துள்ளனர்.

நிலமை எப்படி இருப்பினும், பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைக்கு மகிந்த தள்ளப்பட்டுள்ளார் என்பது மட்டும் 100% உண்மை.

Latest articles

Similar articles