புதினம்

காலி முகத்திடலுக்கு உணவு எடுத்துச் செல்ல தடை விதிக்கும் இராணுவம் 🎥

காலி முகத்திடலில் அமைதி வழியில் அரச எதிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் இளைஞர் யுவதிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் ஒருவரை இராணுவத்திரனர் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் ஒரு ஆணும், பெண்ணும் வழி மறித்த இராணுவத்தினரிடம் தமது ஆதங்கங்களை வெளியிட்டிருக்கிறார்கள். வாகனத்தை திறந்து தாம் உணவுப் பொருட்கள்தான் எடுத்துச்...

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பிந்திய இணைப்பு : எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தின் பல பிரிவுகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்பதால், எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற மாட்டாது என நம்பப்படுகிறது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாடுதழுவியரீதியில் தற்காலிகமாக எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது. நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் இடம்பெற்றுவருகின்றமையால்,...

வடக்கு கிழக்கிலும் தீ வைப்பு சம்பவங்கள்

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் அரச எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்த மக்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி பிரமுகர்களாலும் அவர்களின் ஏற்பாட்டில் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்ட காடையர்களாளும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்கள் இப்போது நாடுமுழுவதும் அரசிற்கெதிரான வன்முறைப் போராட்டமாக மாறியுள்ளது. வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் அமைந்திருந்த அங்கஜன்...

உத்தியோகபூர்வ உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள்

இலங்கையில் நேற்று(09/05) ஆரம்பமான கலவரத்தால் இன்று(10/05) காலை ஆறு மணிவரையில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட் சேதங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, எட்டு பொதுமக்கள் இந்த கலவரத்தால் உயிரிழந்துள்ளார்கள். இதில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும், இருவர் தென் மாகாணதிலும் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளடங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்...

மத்திய வங்கி ஆளுநருடன் சஜித் அணி சந்திப்பு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பாகவும், மத்திய வங்கியின் தற்போதைய நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாடு மீட்சி பெற தமது கட்சி...

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சுப்ரமணிய சுவாமி

தற்போது இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், மகிந்த ராஜபக்சவின் நண்பருமான சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை மக்களின் கோபத்தை, இந்தியாவிற்கு எதிராக சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றன. எனவே இந்தியா உடனடியாக இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி அரசியல் ஸ்திரத்தன்மையை சீராக்க வழிவகை மேற்கொள்ள...

பசிலின் மாளிகை வீட்டிற்கும் தீ வைப்பு 🎥

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மல்வானை மாளிகை வீட்டிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். முதலில் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மக்கள், பின்னர் வீட்டினுள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிய பின்னர், வீட்டிற்கு தீ மூட்டினர். பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

திருகோணமலை கடற்படை முகாம் அருகே அணிதிரளும் மக்கள் 🎥

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட பல முக்கிய அரசியல் புள்ளிகள் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதாக பரவிவரும் செய்திகளை அடுத்து, பல பொதுமக்கள் கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலிற்கு அருகில் அணிதிரளத் தொடங்கியுள்ளார்கள். இன்று காலை அலரி மாளிகையில் இருந்து உலங்குவானூர்தி மூலம் புறப்பட்ட மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை...

கட்டுநாயக்கா விமான நிலைய நுழைவாயிலை மறித்துள்ள இளைஞர்கள்

அரசியல் பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாத வண்னம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலை இளைஞர்கள் மறித்துள்ளனர். கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் வாகனங்களைக் கொண்டு பிரதான நுழைவாயிலை மறித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு...

கட்டுமீறிச் செல்லும் கலவரம், தலை மறைவாகும் அரசியல்வாதிகள்

அமைதி வழியில் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில், பொதுஜன பெரமுனவின் காடையர்கள் புகுந்து நாசம் விளைவித்ததால், இன்று இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் அரசிற்கெதிரான கலவரங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக தென்னிலங்கையில் மக்கள் கடும் ஆக்ரோசத்துடன், பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ச அரசிற்கு சார்பான அரசியல்வாதிகளை தேடி அலைகிறார்கள். மகிந்த ராஜபக்சவின் பல இல்லங்களில் ஒன்றான குருநாகல் இல்லத்திற்கும்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img