ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சி! 🎥

ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதற்காகவே அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Video credit : Shankanikyan Facebook

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் சபாநாயகரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மேற்படி விடயத்தை சுமந்திரன் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

பாராளுமன்றம் வரும் 17ம் திகதியே கூடவுள்ள நிலையில், வரும் 10 நாட்களுக்குள் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளும் சட்டபூர்வமானவையாகவே இருக்கும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, அவசரகாலச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என அவர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், திங்கட்கிழமை அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முழுமையான காணொளியைப் பார்வையிட இங்கே அழுத்தவும்.

Latest articles

Similar articles