புதினம்
National news
நான்கு குழுக்களை நியமித்தார் ரணில்
புதினம் -
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாக ஆராய நான்கு குழுக்களை நியமித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. ருவான் விஜயவர்த்தன : மருந்துவ பொருட்ககளின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,சாகல ரத்நாயக்கா : எரிபொருள் தட்டுப்பாடுகள் மற்றும் விநியோகம் தொடர்பாகவும்,வஜிர அபேவர்த்தன : அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,அகில விராஜ் காரியவசம் : உரப் பொருட்களின் நிலை...
National news
முக்கிய கட்சிகள் அமைச்சரவையில் இணைய மறுப்பு
புதினம் -
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் முக்கிய கட்சிகள் இணைய மறுத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் ரணிலின் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும் முடிந்தால் ரணில் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார். ரணில் அரசாங்கத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியும் அமைச்சுப்...
Articles
விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!
புதினம் -
இலங்கை அரசியல் வரலாற்றில் அதி உச்ச சிக்கல் அல்லது அரசியல் நெருக்கடி தற்போதுதான் ஏற்பட்டுள்ளது எனலாம். எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் எனும் ஒரு நிலையே தோன்றியுள்ளது. சிங்களவரின் மத்தியில் சிங்கம் மாதிரி வலம் வந்த மகிந்த, இன்று அதே மக்களுக்குப் பயந்து குகைக்குள் ஒளிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக...
National news
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார் ஜனாதிபதி
புதினம் -
ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமனம் பெற்றுள்ளார். இளைய தலைமுறையினரால் அரசாங்கத்திற்கெதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ரணில் விக்ரம்சிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளார். இலங்கை வரலாற்றில்,👉 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான ஒருவர் பிரதமராவதும்,👉 ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது ஒருவர்...
National news
ரணில் பிரதமராவது மக்களின் விருப்பமல்ல – அனுர குமார திசாநாயக்க
புதினம் -
ஜனாதிபதியும், ரணில் விக்ரமசிங்கவும் சட்டத்திற்கு மாறாக செய்யும் எதையுமே மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்ணனியின் (JVP) தலைவர் அனுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார். மேலும் ரணில் விக்ரமசிங்க ராஜபக்சகளின் காவலன், அவர் ஜனாதிபதியை நம்பலாம், ஜனாதிபதி ரணிலை நம்பலாம் ஆனால் அவரை பிரதமாராக்குவது மக்களின் விருப்பமல்ல என்றும் தெரிவித்த ...
National news
பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசா தயார் 🤔
புதினம் -
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியின் வேண்டுகோளை நிபந்தனைகளுடன் ஏற்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் முழுமையாக மறுத்திருந்த சஜித், பின்னர் மகா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளையும் ஏற்று சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பதாக ஜனாதிபதிக்கு கடிதம்...
National news
மகிந்த, நாமல் உட்பட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை
புதினம் -
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொழும்பில் 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' பகுதிகளில் தாக்குதலை நடத்தி, மக்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியதாக, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தன்னையே முறைப்பாட்டாளராக பெயரிட்டு தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த வெளிநாட்டு பயணத்...
Articles
ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?
புதினம் -
புதிய பிரதமர் ஒரு வார காலத்தினுள் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார். மேற்குறித்த விசேட உரை ஒளிபரப்பாக முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜனாதிபதிக்குமிடையே அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள்...
National news
ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் – ஜனாதிபதி
புதினம் -
ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் 19வது திருத்தச் சட்டத்தை மீளக் கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாடு ஸ்திர நிலை அடைந்ததும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க நான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
National news
மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை
புதினம் -
விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாதுவிடின் இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குச் செல்லும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய நிலைமை தொடருமாயின் வரும் நாட்களில் 10 தொடக்கம் 12 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ள ஆளுநர், கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதுடன்,...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
