புதினம்
National news
வரும் ஓரிரு மாதங்கள் மிகவும் கடினமான மாதங்களாக அமையும் – ரணில்
புதினம் -
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(16/05) நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரையில், வரும் ஓரிரு மாதங்கள் நம் வாழ்நாளில் மிகவும் கடினமான மாதங்களாக இருக்கும் எனத் தெரிவுத்துள்ளார். இலங்கை திறைசேரியில் பணம் முற்றாக நிறைவடைந்துள்ளதால் எரிபொருள், எரிவாயு மற்றும் மருத்துவப் பொருட்களுக்குரிய பணத்தை செலுத்த முடியாமல் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் நேச நாடுகள் பண உதவி...
Local news
இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது – ரணில்
புதினம் -
நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையேதுமில்லை. போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவினர்களுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்த பிரதமர், போரின்போது இறந்தவர்கள் அனைவருமே இலங்கையர்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்...
Local news
பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்
புதினம் -
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று(15/05) பொத்துவிலில் ஆரம்பமானது. பொத்துவில் பேரணியானது வரும் 18ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலைச் சென்றடையும். 15/05 : பொத்துவில் - கல்லடிப் பாலம்16/05 : கல்லடிப் பாலம்...
National news
இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா❓
புதினம் -
🔴 707 வன்முறைச் சம்பவங்கள்🔴 75 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் சேதம்🔴 230 பேர் கைது🔴 மகிந்தவை காவல்துறை கைது செய்யுமா? கடந்த 9ம் திகதி மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுனவின் காடையர்களினால் கொழும்பில் வன்முறைகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்களினால் பிரதமர் உட்பட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரின்...
National news
உண்டியலில் பணம் அனுப்ப முற்பட்டவர்கள் கைது
புதினம் -
கொழும்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உண்டியல் மூலம் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முயற்சித்த இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். 47,000 அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக உண்டியல் பணப்பரிமாற்றம் மூலம் அனுப்ப முயற்சித்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் சட்டவிரோத சொத்துக்கள் சம்பந்தமாக விசாரணை செய்யும் கிருலப்பனை காவல்துறையினரிடம் கைளிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், சட்டவிரோதமான...
Articles
இந்தியாவின் விஷம்
புதினம் -
தம்மை எதிர்த்த விடுதலைப் புலிகளை அழித்தார்கள். சீனாவுடன் உறவாடிய இலங்கை அரசிற்கு வரலாறு காணாத பாடம் புகட்டினார்கள். மீண்டும் விடுதலைப் புலிகள் கதையை கையில் எடுதுள்ளார்கள். தற்போதைய நிலவரப்படி இலங்கை தீவு முற்றுமுழுதாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்த்துகின்ற அதே நேரத்தில், ஹிந்து பத்திரிகையோ விடுதலைப்...
National news
65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்கும் இந்தியா
புதினம் -
இந்தியா 65,000 மெற்றிக்தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்குகின்றது. இந்தியாவிலிருந்து யூரியாவை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டிருப்பினும், இலங்கை அரசாங்கம் விடுத்த அவசர வேண்டுகோளையடுத்து, இந்தியா யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்புகின்றது. ஒவ்வொரு வருடமும் 400 மில்லியன் டொலர்கள் உர இறக்குமதிக்காக தேவைப்படுவதால், கோத்தபாய அரசாங்கம் இரசாயன உரங்களின் பாவனையை கடந்த வருடம் தடை செய்திருந்தது. அதற்குப் பதிலாக...
National news
மகிந்த உட்பட ஏழு பேரைக் கைது செய்யுமாறு வழக்குத் தாக்கல்
புதினம் -
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஏழுபேரைக் கைது செய்யும்படி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சேனக பெரேரா என்பவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், அகிம்சை வழியில் அலரி மாளிகையின் முன்னாலும், காலி முகத்திடலிலும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டமை மற்றும் உதவியமை போன்ற காரணங்களுக்காக,...
National news
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அடித்தே கொல்லப்பட்டுள்ளார்
புதினம் -
பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரள மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் ஆகியோர் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மறித்துள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட பதற்றத்தினால் மெய்ப்பாதுகாவலரான காவல்துறை சார்ஜண்ட் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதன்போது பலர் காயமடையந்தனர். இதனால் ஆத்திரமுற்ற மக்கள் அமரகீர்த்தி...
National news
ரஞ்சன் ராமநாயக்கா விடுதலையாகும் சாத்தியம்!!
புதினம் -
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பெரும் குற்றச் செயல்களை மேற்கொண்ட பலர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ரஞ்சன் ராமநாயக்காவை விடுவிப்பதற்கான வேண்டுகோள் நியாயமானது எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுள்ளபடியால், ஜனாதிபதியுடன் பேசி...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
