மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை

விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாதுவிடின் இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குச் செல்லும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடருமாயின் வரும் நாட்களில் 10 தொடக்கம் 12 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ள ஆளுநர், கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், பாரிய அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடும் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், ஓரிரு வாரங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என எண்ணியே இக்கட்டான சூழ்நிலையில் இந்த ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இருப்பினும் ஒரு மாதம் கடந்தும் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்படியே அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாமல் நிலைமை தொடருமானால், நான் ஆளுநர் பதவியில் தொடர்ந்து இருப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சர் இல்லாமல், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளைத் தொடர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest articles

Similar articles