பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசா தயார் 🤔

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியின் வேண்டுகோளை நிபந்தனைகளுடன் ஏற்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் முழுமையாக மறுத்திருந்த சஜித், பின்னர் மகா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளையும் ஏற்று சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சஜித் விதித்துள்ள நிபந்தனைகளாவன,
🟢 இரண்டு வார காலப்பகுதியினுள் 19வது திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும்
🟢 ஐக்கிய மக்கள் சக்தி பிரேரித்த 21வது திருத்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்
🟢 குறித்த சில காலப்பகுதியினுள் ஜனாதிபதி இராஜினாமச் செய்ய வேண்டும்
🟢 நிலையான அரசாங்கத்தை தெரிவு செய்ய, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி வழிவகை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளையே சஜித் பிரேமதாசா விதித்துள்ளார்.

இருப்பினும் நேற்று(11/05) இரவு ரணில் விக்ரமசிங்கவை நேரில் அழைத்து, பிரதமர் பதவியை ஏற்கும்படி ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles