புதினம்
National news
நாமலிடம் CID விசாரணை
புதினம் -
நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியேறிய பொதுஜன பெரமுணவின் காடையர்களினால் 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' தாக்கப்பட்டமை தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெறுகின்றன. விசாரணைகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என நாமல் தெரிவித்துள்ளார். - ரணில்...
National news
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
புதினம் -
பிரதமரின் புதிய அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள், சுயாதீனமாக இயங்கிய பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி தனித்து இயங்கும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரா என ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். 🌑...
Articles
அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!
புதினம் -
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் இலங்கைக்கான சர்வதேச இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மொஹமட் நஸீட் அவர்கள் தானாக வேண்டுகோள் விடுத்ததாகவும், பிரதமர் அதனை ஏற்று, அவரை இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக நியமித்துள்ளார் எனவும் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது பலத்த சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ரணிலின் இந்த முடிவு,...
National news
கோத்தா-ரணில் சதிகார அரசை விரட்டுவோம் – IUSF
புதினம் -
"கோத்தா - ரணில் சதிகார அரசாங்கத்தை விரட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால்(IUSF) நேற்று(19/05) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று கொழும்பில் நடத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை காவல்துறையினர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை கையளிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் மாணவர்களின் கடும் எதிர்ப்பினால் அது நடைபெறவில்லை. ஜனாதிபதி செயலகத்தை...
Tamil Nadu News
பேரறிவாளன் விடுதலை
புதினம் -
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில், அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கத் தவறியது தவறு எனவும் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் வழக்கு...
Tamil Nadu News
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்
புதினம் -
தமிழ்நாடு தஞ்சாவூரில் அமையப் பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உலகத் தமிழர் பேரமைப்பினால் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், இறுதிப்போரின் காட்சிகள் கற்சிலைகளாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பழ நெடுமாறன் அவர்கள் சசிகலாவிற்கு முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் அவலம் மற்றும்...
Local news
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கண்காணிக்கும் புலனாய்வுத்துறை
புதினம் -
உலகின் கொடூர மனிதப் படுகொலைகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளை சிங்கள புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர். நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பினும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித தடைகளும் இல்லை என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இருப்பினும் படைத்தரப்பினர் முள்ளிவாய்க்கால் வாகனத்தை பின் தொடர்ந்து படம் பிடிப்பதும், இன்று நினைவேந்தல்...
National news
பாடசாலைகளுக்கு மே 20 முதல் விடுமுறை
புதினம் -
இலங்கையில் பாடசாலைகளுக்கு வரும் 20ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுகிறது. மீண்டும் ஜீன் 2ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். இம்மாதம் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காவே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் ஆரம்பித்த நாள் முதல் இலங்கையின் பாடசாலை கல்விசார் நடவடிக்கைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன...
National news
பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரைக் கைது செய்ய உத்தரவு!
புதினம் -
'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' பகுதிகளில் ஆர்ப்பாட்டகாரர்களைத் தாக்கிய 22 பேரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், காவல்துறைமா அதிபருக்கும், குற்றப் புலனாய்வு பிரிவின் உதவிக் காவல்துறைமா அதிபருக்கும் பணித்துள்ளார். இதில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மேல்மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். மகிந்தவின் நெருங்கிய...
National news
அரச சார்பு காடையர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
புதினம் -
கொழும்பில் காவல்துறையின் தலைமையகம் முன்பாக சோசலிச இளைஞர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' பகுதிகளில் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய அரச சார்பு காடையர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். மகிந்த ராஜபக்ச அரசில்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
