புதினம்
National news
நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றார் ரணில்
புதினம் -
எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். இன்று(25/5) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் நிதி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். நிதி அமைச்சுப் பதவியை எவரும் ஏற்க முன்வராத காரணத்தினால், பிரதமரே அந்த அமைச்சுப் பதவியையும் ஏற்றுள்ளார். எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினர்...
Local news
காரைநகர்-ஊர்காவல்துறை அரச படகுச் சேவை இடைநிறுத்தம்
புதினம் -
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் காரைநகர்-ஊர்காவல்துறை இடையே இடம்பெற்றுவந்த அரச படகுச் சேவை கடந்த ஒரு வாரகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட படகுச் சேவைக்கு, வாரத்திற்கு 500 லீட்டர் மண்ணெண்னை தேவைப்படுவதுவதாகவும், யாழில் மண்ணெண்னைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் படகுச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட தனியார் படகுச் சேவைகள் இடம்பெறினும், கட்டணங்கள் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக மக்கள்...
World News
அமெரிக்காவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 21பேர் உயிரிழப்பு
புதினம் -
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சிறுவர் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 21பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட 18 வயதான உயர் பள்ளி மாணவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு காவல்துறையினரும் காயமடைந்து சிகிச்சை...
National news
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு உதவி
புதினம் -
இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான கடும் நெருக்கடியைத் தீர்க்க உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தமது முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதன் மூலம், அவசிய மற்றும் அவரசரமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு உதவி செய்கின்றது உலக சுகாதார ஸ்தாபனம். நேற்று(24/05) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த உலக...
National news
எட்டு அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமனம்
புதினம் -
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று(23/05) எட்டு அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து நியமனம் பெற்றனர். தற்போதைய நிலையில் பிரதமர் மற்றும் 19 அமைச்சர்கள் என 20 பேர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர். இதுவரையில் நிதி அமைச்சராக எவரும் பதவியேற்கவில்லை. பெரும்பாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராகப் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள...
Local news
யாழில் டெங்கு காய்ச்சலினால் 11 வயது மாணவன் உயிரிழப்பு
புதினம் -
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தொற்றினால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதினொரு வயதான பாடசாலை மாணவனுக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் காய்ச்சலுடன் வயிற்றோட்டமும் ஏற்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் மாணவனுக்கு, சிகிச்சை பலனளிக்காமையினால் அவர் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் நுளம்பின் மூலமாக பரவும் ஒரு வைரஸ் நோயாகும்.
National news
ஆஸ்திரேலியாவில் 9 வருடங்களின் பின்னர் ஆட்சிக்கு வரும் தொழிலாளர் கட்சி
புதினம் -
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் ஒன்பது வருடங்களின் பின்னர் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றது. கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சியிலிருந்த லிபரல் கூட்டணிக் கட்சியை தோற்கடித்து, அன்ரனி அல்பனீசி தலைமையிலான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி(ALP) ஆட்சியமைக்கின்றது. இதன்படி அன்ரனி அல்பனீசி ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
National news
தமிழக மக்களின் நிவாரணப் பொருட்களுடன் கப்பல் இன்று வருகின்றது
புதினம் -
இலங்கை மக்களுக்கு தமிழக மக்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் முதற்கட்ட பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று(22/05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது. தமிழக மக்களால் 40,000 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் பெருமளவு மருந்துப் பொருட்கள் போன்றவற்றை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இதில்...
National news
பொய்யுரைத்த பாராளுமன்ற உறுப்பினர்
புதினம் -
பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தாம் இலங்கை விமானப் படையிலும், ஶ்ரீலங்கன் விமான சேவையிலும் விமானியாக பணியாற்றியதாக பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தமை முற்றுமுழுதான பொய் எனத் தெரியவந்துள்ளது. தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டபோது தனது ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக எரிந்து போயுள்ளதாகவும், குறிப்பாக தான் விமானியாக பணியாற்றிய ஆவணங்கள் அனைத்தும் அழிந்துள்ளதாகவும் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து...
Local news
ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகு சவாரி ஆரம்பம்
புதினம் -
யாழ்ப்பாணம் ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் பொழுதுபோக்கு படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த படகு சவாரியில், சிறிய படகு ஒன்று பயன்பாட்டில் விடப்பட்டுள்ளது. எட்டு இருக்கைகளைக்கொண்ட இயந்திரப் படகு மக்களுக்கான பொழுதுபோக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த படகின் மேற்பகுதி, இயற்கையான முறையில் பனை ஓலைகளினால் கூரை போன்று அமைக்கப்பட்டுள்ளது....
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
