பொய்யுரைத்த பாராளுமன்ற உறுப்பினர்

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தாம் இலங்கை விமானப் படையிலும், ஶ்ரீலங்கன் விமான சேவையிலும் விமானியாக பணியாற்றியதாக பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தமை முற்றுமுழுதான பொய் எனத் தெரியவந்துள்ளது.

தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டபோது தனது ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக எரிந்து போயுள்ளதாகவும், குறிப்பாக தான் விமானியாக பணியாற்றிய ஆவணங்கள் அனைத்தும் அழிந்துள்ளதாகவும் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பாக இலங்கை விமானப்படை மறுப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதில் அருந்திக்க பெர்னாண்டோ ஒருமுறை விமானிகளுக்கான பயிற்சியில் பங்குபற்றியிருந்ததாகவும், இருப்பினும் அதில் அவர் சித்தியடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு விமானிகளை வழங்கும் நிறுவனமும் அருந்திக்க பெர்னாண்டோ தமது நிறுவனத்தில் விமானியாக பணியாற்றவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

2017ம் ஆண்டு அருந்திக்க பெர்னாண்டோவை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles