உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு உதவி

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான கடும் நெருக்கடியைத் தீர்க்க உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தமது முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதன் மூலம், அவசிய மற்றும் அவரசரமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு உதவி செய்கின்றது உலக சுகாதார ஸ்தாபனம்.

நேற்று(24/05) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Dr.அலகா சிங், தற்போதைய நெருக்கடியான சூழலில் தமது அமைப்பு இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் இந்த மருந்து தட்டுப்பாடு நீங்கும் என தாம் நம்புவதாகவும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்குத் தேவைகளை மேலும் மேம்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் உதவும் எனவும் தெரிவித்திருந்தார்.

Latest articles

Similar articles