புதினம்

டெங்கு ஒழிப்பு வாரம் ஜீன் 15 முதல் 21 வரை

அதிகளவில் பரவிவரும் டெங்கு நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இம்மாதம் 15 முதல் 21 வரை (ஜீன் 15 - 21) விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த எட்டு நாட்களில் நாடு முழுவதும் 2,416 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதில் 51.2 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் மட்டும்...

ஐ.நா உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் இலங்கை வருகிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட (WFP) அமைப்பின் தலைவர் டேவிட் பேஸ்லே இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். WFP அமைப்பின் தலைவர் டேவிட் பேஸ்லேவுடன் தான் தொலைபேசியில் உரையாடும்போது இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தனது அழைப்பை ஏற்று டேவிட் பேஸ்லே விரைவில் இலங்கைக்கு...

பசில் ராஜபக்ச ராஜினாமா

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். புதிய அரசியல் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள பசில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தானாகவே நீக்கப்பட்டிருப்பார். அதற்கு முன்னதாக தானாகவே பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். ராஜபக்ச குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்தினால்,...

சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டைவிட்டு செல்ல முயன்ற 91 பேர் கைது

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் டிரோலர் படகொன்றின் மூலமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்ல முயன்ற 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதே நோக்கத்திற்காக மாரவில விடுதி ஒன்றில் தங்கியிருந்த 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று(07/06) கடற்படையினரின் வழமையான ரோந்து நடவடிக்கையின்போது சிலாபம் கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான டிரோலர் மீன்பிடி படகு ஒன்றை கடற்படையினர்...

வெளிநாட்டுப் பணத்துடன் இந்திய வியாபாரி கைது

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்ல முற்பட்ட இந்திய வியாபாரியிடம் இருந்து சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வியாபார நோக்கில் வந்திருந்த 45 வயதுடைய இந்திய பிரஜை, மீண்டும் இந்தியா செல்லும் முகமாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட...

பிரசன்ன ரணதுங்கவிற்கு சிறைத் தண்டனை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு செலுத்தும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015இல் வர்த்தகர் ஒருவரைப் பயமுறுத்தி பணம் பெற முயற்சித்த குற்றச்சாட்டிற்காகவே கொழும்பு உயர் நீதிமன்றம் மேற்படி தண்டனையை விதித்துள்ளது. இந்த வழக்கிலிருந்து பிரசன்ன ரணதுங்கவின் மனைவி அனைத்து...

20 வீதமான தனியார் பேருந்துகளே இன்று சேவையில் ஈடுபடும்

20 சதவீதமான தனியார் பேருந்துகளே இன்று(06/06) சேவையில் ஈடுபடுமென தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் டீசல் தட்டுப்பாட்டினாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இக்கட்டான நிலையிலும், இதுநாள்வரையில் 50 சதவீதமான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தார். அரசின் வரி அதிகரிப்பால் பேருந்து உதிரிப்பாகங்களின் விலை...

யாழில் சமுர்த்தி கொடுப்பனவுகள்

யாழ் மாவட்டத்தில் உள்ள 78,442 சமுர்த்தி பயணாளிகளுக்கான கொடுப்பனவு, அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் திரு மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 1-2 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 5,000 ரூபாயும், 3 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 6,400 ரூபாயும், நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 7,500...

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்ன்னாண்டோவை தேடும் காவல்துறை

கடந்த மாதம் 9ம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், மகிந்தவின் கைக்கூலியுமான ஜொன்ஸ்ரன் பெர்ன்னாண்டோவை தேடிக் கண்டுபிடிக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோவை விரைவில் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்...

கடும் விலை அதிகரிப்புடன் மீண்டும் சந்தைக்கு வரும் லா(f)ப்ஸ்

இலங்கையின் சமையல் எரிவாயு வழங்கலை மேற்கொள்ளும் மற்றொரு நிறுவனமான லா(f)ப்ஸ், மீண்டும் தனது சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கின்றது. கடும் விலை அதிகரிப்புடன் சந்தைக்கு வரும் லா(f)ப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை பின்வருமாறு, 12.5kg சிலிண்டர் - 6,850/=5kg சிலிண்டர் - 2,740/= இதேவேளை கடந்த மார்ச் மாதம் 12.5kg சிலிண்டரின் விலை 2,840/= ஆக...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img