50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கும் ஆஸ்திரேலியா

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருத்துவ பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அவசர உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை இலங்கைக்கு வழங்குகின்றது.

முதற்கட்டமாக 22 மில்லியன் டொலர்களை ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) ஆஸ்திரேலியா வழங்குகின்றது. இதன் மூலம் WFP அமைப்பு இலங்கையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 3 மில்லியன் மக்களுக்கான அவசர உணவு வழங்கலை மேற்கொள்ளும்.

இதேவேளை, நடப்பாண்ட்டில் (2022-2030) இலங்கையின் அபிவிருத்திக்காக மேலும் 23 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகின்றது.

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கியிருந்த 5 மில்லியன் டொலர்கள் உதவியுடன் சேர்த்து, மொத்தமாக 50 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles