தமிழக மக்களின் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தது

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு, தமிழக மக்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் இரண்டாம் கட்ட பொருட்களை ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

மேற்படி நிவாரணப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் கையளித்திருந்தார்.

தமிழக மக்களால் அன்பளிப்பாக வழங்கப்படும் 40,000 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 500 மெற்றிக் தொன் பால்மா வகைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போன்றவற்றை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

இதில் இரண்டாம் கட்டமாக பின்வரும் பொருட்கள் நாட்டை வந்தடைதுள்ளது.

🔵 அரிசி – 14,700 மெ.தொன்
🔵 பால்மா – 250 மெ.தொன்
🔵 மருந்துப் பொருட்கள் – 38 மெ.தொன்

tamil nadu people help srilanka
tamil nadu people help srilanka
முதற்கட்ட நிவாரணப் பொருட்கள்

Latest articles

Similar articles