ஜீன் மாதத்தில் மட்டும் 125 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா

சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட 125 இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட நான்கு படகுகளை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படையினர் வழிமறித்துள்ளனர். படகில் வந்த அனைவரையும் (மொத்தமாக 125பேர்) பாதுகாப்பாக விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் நாட்டை விட்டுச் செல்ல பல்வேறு வழிகளிலும் முயன்று வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் வழங்குவார்கள் என்னும் பொய்யான வாக்குறுதிகளை ஆட்கடத்தல்காரர்கள் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றமையும், மக்கள் ஆஸ்திரேலியா நோக்கி ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொள்ள மிக முக்கிய காரணமாக அமைகின்றது.

australia sri lanka people smugglers

பிரபலமானவை