புதினம்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா மீது யாழ் மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவரே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஊழல் முறைப்பாடுகளை தெரிவிக்க 1905

அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மற்றும் இலஞ்சம் பெறல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க 1905 எனும் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த துரித தொலைபேசி இலக்கத்திற்கு, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல்...

கட்டுப்பாட்டை இழந்த யாழ்-கொழும்பு பேருந்து, மூவர் உயிரிழப்பு

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தினருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற சொகுசு பேருந்து ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது. இதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 16பேர் காயடமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Update : உயிரிழந்த மூவரில் ஒருவர் யாழ்...

சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் சேந்தாங்குள கடற்கரையில் இருந்து 60 கிலோ கஞ்சா போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அதி உச்ச பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைமுகத்திற்கு அண்மையான கடற்பரப்பிலேயே இராணுவத்தினர் கஞ்சாவை மீட்டுள்ளனர். பாதுகாப்பு வலய கடற்பரப்பில் கஞ்சா கடத்தும் துணிவை எவ்வாறு கடத்தல்காரர்கள் பெற்றார்கள் என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. இந்தியாவிலிருந்து சிறிய படகுமூலம் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

B+ மற்றும் O+ குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் பாரிய குருதி தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக B+ மற்றும் O+ குருதி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் தினமும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை இரத்ததானம் செய்யலாம் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாழில் டெங்கு நோயால் பெண் ஒருவர் மரணம்

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாய் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஐந்து பிள்ளைகளி தாய் ஒருவரே டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மீண்டும் திரிபோஷா

நிதிப்பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை திரிபோஷா நிறுவனும் விடுத்துள்ள அறிக்கையில், கொள்வனவு செய்யப்பட்ட 34 கொள்கலன்கள் சோளவகை இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் சிறுவர்களுக்கான திரிபோஷா உற்பத்தியும் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர்

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோய்த் தொற்று உள்ள ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். டுபாய் அபுதாபியிலிருந்து வந்தவர் என்று கருதப்படும் ஒருவருக்கே குரங்கம்மை நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 20 மதிக்கத்தக்க இளைஞர் கடந்த முதலாம் திகதி (01/11) குரங்கம்மை வைரசுடன் இலங்கை வந்துள்ளார். இவர் தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படுமென சுகாதார...

இலங்கை கடற்படைக்கு அமெரிக்காவின் அன்பளிப்பு

இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா கப்பல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அமெரிக்க கடற்படையினரால் முன்னர் பாவிக்கப்பட்ட ரோந்துக் கப்பல் ஒன்றையே அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் சியாட்டல் துறைமுகத்திலிருந்து P627 என்னும் இந்த கப்பல் நேற்று(02/11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பில் அரசிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

கொழும்பு மருதானை பகுதியில் நேற்று (02/11/22) அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது. பல தொழிலாளர் சங்கங்கள், 150 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக எதிர்க் கட்சி உட்பட பல அரசியல் கட்சி உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். "அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு"...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img