நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் 🎥

ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு (f)பிளவர் வீதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மக்கள் பிரதமர் அலுவலகத்தின் முன் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்.

நிலைமைகளைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடுதழுவியரீதியில் அவசரகாலச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வன்முறைகளில் ஈடுபடும்வகையில் எவராவது முயன்றால், அவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும் காவல்துறையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பார ஊர்திகளில் பெருமளவில் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடும் உத்தரவுகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரபலமானவை