புதினம்

2024 தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 🎥

2024இல் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடப் போவதாகாத் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் மீட்சி இப்பொழுதே ஆரம்பமாகிறது" எனும் தொனிப் பொருளுடன் டொனால்ட் டிரம்ப் தனது மூன்றாம் முறை போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். குடியரசுக் கட்சி வாக்காளர்களிடையே இன்னும் மிகவும் பிரபலமாக உள்ள டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே...

முருகன், சாந்தன், ரொபேட், ஜெயகுமார் ஆகியோரை நாடுகடத்த உத்தரவு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான முருகன், சாந்தன், ரொபேட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை இலங்கைக்கு நாடுகடத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி நால்வரையும் விரைவாக இலங்கைக்கு நாடுகடத்தும்படி தமிழ்நாட்டு அரசுக்கு மத்திய உள்ளவிவகார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும் இவர்களில் சிலர்...

சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் என நான் நம்பவில்லை – அமெரிக்க ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். G20 உச்சி மாநாட்டில் பங்கு பெற பாலி நகர் வந்துள்ள சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் நேருக்கு நேர் சுமார் மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவின் தாய்வான் ஆக்கிரமிப்பு விவகாரம் அமெரிக்கா மற்றும் சீனா உறவில் பாரிய...

ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) 780.1 மெற்றிக் தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களில் அரை ஏக்கருக்கும் குறைவான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் 15,619 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோ யூரியா வீதம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படும். யூரியா உரத்திற்கான தடையால் நாடு...

ஆறு வருடங்களின் பின்னர் சந்திக்கும் சீன ஆஸி தலைவர்கள்

சீனா - ஆஸ்திரேலிய தலைவர்கள் ஆறு வருடங்களின் பின்னர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தோனேசியாவின் பாலியில் இடம்பெற்றுவரும் G20 மாநாட்டில் பங்குபெற வந்திருக்கும் சீன ஜனாதிபதி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் நேருக்கு நேர் சந்த்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த பெரும் இராஜதந்திர விரிசலிற்கு முடிவு கட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது....

ரணிலின் வரவு செலவு திட்டம் பாரிய ஏமாற்றம் – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(14/11) முன்வைக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் உலக உணவுத் திட்டம்(WFP), உலக வங்கி(World Bank) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ICRC) ஆகியவற்றால் வறுமை...

வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி – எதிர்க்கட்சிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியால் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு எவ்வித தீர்வும் வரவு செலவு திட்டத்தில் வழங்கப்படவில்லை...

சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று(15/11) மாலை 5.30 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனின்...

நான்கு பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைவு

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட நான்கு பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான,- அனுர பிரியதர்ஷன யாப்பா- சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே- சமிந்த வீரக்கொடி- ஜெயரட்ன ஹேரத் ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். மேற்படி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக பாராளுமன்றில்...

ஹிருணிகா உட்பட 14 பேர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உட்பட 15 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஹிருணிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவிருந்தது. கொழும்பு ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img