புதினம்

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம், ஒருவர் கைது

டுபாயில் வேலை எனக் கூறி ஓமானுக்கு சட்டவிரோதமாக பெண்களை அழைத்துச் சென்றவரை இலங்கை காவல்துறையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இன்று(19/11) இலங்கை திரும்பிய 44 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் உரிமையாளர் எனத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக...

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐ.நா அரசியல் குழு சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார குழுவினருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த சந்திப்பிபோது, அண்மையில் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் போன்ற அமைப்புக்களால் வறுமை மற்றும் உணவின்மை பிரச்சனைகள் காரணமாக நலிவுற்ற மற்றும் பிந்தங்கிய மக்களாக...

இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்தியாவில் முதன் முதலாக தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதுள்ளது. ஸ்கைரூட் எனும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விக்ரம்-S எனும் ரக்கெட் ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 200 பொறியியலாளர்கள் கொண்ட அணியினர் இந்த ராக்கெட்டை இரண்டு வருடகாலப் பகுதியினுள் செய்து முடித்துள்ளனர். 6 மீட்டர் நீளமும், 0.375 மீட்டர் அகலமும்...

டுவீட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

பிரபல சமூக வலைத்தளமான டுவீட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக ஒரு வாரம் மூடுவதாக அந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் மூடப்படும் அலுவலகங்கள், வரும் திங்கட்கிழமை(21/11) மீளத் திறக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஊழியர்கள் எவரும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நிறுவனம் சார்ந்த தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ...

அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட வடகொரியாவின் ஏவுகணை

வட கொரியா அண்மையில் சோதித்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏவுகணையின் அளவு மற்றும் நிறையைப் பொறுத்து, இது 15,000 கிலோமீற்றர் வரை செல்லக் கூடியது என்றும், அமெரிக்கா இந்த சுற்றுவட்டத்திற்குள்ளேயே வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அணு குண்டினைக் காவிச் செல்லக்...

2026இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பல இடங்களில் இராணுவத்தினராலும், விடுதலைப்புலிகளினாலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. 2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர், கண்ணிவெடி அபாயத்தினால் மக்களை மீள் குடியேற்றுவதில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டது. இதுவரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பிலிருந்து, எட்டு இலட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள் மற்றும்...

52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு அரச கடன்சுமை முக்கிய காரணியாக உள்ளதுடன் தற்போது இலங்கையின் அரசமுறை கடன் 52 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது என கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருந்த்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். எம்மால்(பொதுஜன பெரமுன அரசாங்கத்தால்) இழைக்கப்பட்ட அரசியல் தவறுகளை நாம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறோம். இதனை திருத்திக் கொள்வதற்காகவே...

இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூன்று தமிழர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான விசா மூலம் இங்கிலாந்து செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் மல்லாவியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே இலங்கை குடிவரவு அதிகாரிகள் கைது செய்து குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஓமானில் இலங்கைப் பெண்கள் பாலியல் ஏலத்தில் விற்பனை

இலங்கையைச் சேர்ந்த 12 பெண்கள் ஓமானில் பாலியல் தொழிலிற்காக பகிரங்கமாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று டுபாய் அபுதாபியில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிவித்து, இரகசியமாக 12 பெண்களை ஓமானுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஓமானில் இடம்பெற்ற ஓமானியரின் கேளிக்கை விருந்தில் (party), அந்த 12 பெண்களும் பகிரங்கமாக ஏலத்தில்...

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு

இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று(17/11) முதல் அமுலிற்கு வருகிறது. சாதாரண கடவுச்சீட்டிற்கான கட்டணம் 1,500 ருபாவினாலும், ஒருநாள் சேவைக்கான கட்டணம் 5,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய கட்டணம் 5,000 ரூபாய் ஆகும்.ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய கட்டணம் 20,000 ரூபாய்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img