புதினம்

வரவு செலவு திட்டம் – பாதுகாப்பு துறைக்கு குறைந்த ஒதுக்கீடு!

2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், சுகாதாரத் துறை, கல்வித் துறை மற்றும் சமூக பாதுகாப்புத் துறைக்கு போதியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும்,...

ஈரானில் இரண்டு மாதத்தில் 43 சிறுவர்கள் உட்பட 326பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஈரான் அரசாங்கத்திற்கெதிராக கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 326பேர் அரச படைகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஈரான் நாட்டின் மனித உரிமை அமைப்பான IHRNGO அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடுதழுவியரீதியில் 22 மாகாணங்களில் இடம்பெற்றுவரும் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் 43 சிறுவர்கள் மற்றும் 25 பெண்கள் உட்பட 326பேரை ஈரான் அரச படைகள் கொன்றுள்ளதாக IHRNGO...

ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார். இலங்கையின் நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியே பதவி வகிப்பதால், அவரே இன்று 2023 இற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கின்றார். நீண்டகால, நிலையான, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்...

இந்த ஆண்டி ல் இதுவரை 2 மெற்றிக் தொன் போதைப்பொருள் மீட்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை சுமார் இரண்டு மெற்றிக் தொன் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 39,671 சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் சுமார் 39,428 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,290 பாடசாலை மாணவர்கள் மற்றும் 6,345 பெண்களும் உள்ளடங்குவர். இலங்கையில் பல அரசியல்வாதிகள் போதைப் பொருள் வர்த்தகத்தில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கையின்...

கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த சில தினங்களாக யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 221 குடும்பங்களைச் சேர்ந்த 733பேர் பாதிப்படைந்துள்ளனர். வடமராட்சிப் பகுதியிலேயே அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரவெட்டிப் பிரதேச செயலகப் பிரிவில் 7பேரும், மருதங்கேணிப் பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை...

பிணையில் எடுக்க இரண்டு இலட்சம் டொலர்கள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய சிறையில் உள்ள இலங்கை துடுப்பாட்ட அணியின் தனுஷ்க குணத்திலகவின் இரண்டாவது பிணை விண்ணப்பத்திற்காக இரண்டு இலட்சம் ஆஸ்திரேலிய டொலர்களைத் திரட்டுவதில் இலங்கை துடுப்பாட்ட நிறுவனம் (Sri Lanka Cricket) கடும் நெருக்கடியில் உள்ளது. இலங்கை துடுப்பாட்ட நிறுவனம் ஏற்கனவே தனிப்பட்ட பலரிடம் நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும், இலங்கை துடுப்பாட்ட...

நளினி, முருகன் உட்பட ஆறு பேரையும் விடுவித்தது இந்திய உயர் நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பழி சுமத்தப்பட்டு, 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரை இந்திய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்திய உயர் மட்ட அரசியல்வாதிகளின் குரூர அரசியல் விளையாட்டில் சிக்கி, முறையான சாட்சிகள் இன்றி போலியான சாட்சிகளின்...

டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ளது. டீசல் லீற்றருக்கு 15 ருபாயினாலும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ருபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் டீசல் 430 ரூபாவிற்கும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 365 ரூபாவிற்கும் விற்கப்படும்.

22,000 மெ.தொ யூரியா உரத்துடன் வரும் கப்பல்

மலேசியாவிலிருந்து 22,000 மெற்றிக்தொன் யூரியா உரத் தொகுதியை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையவுள்ளது. மேற்படி யூரியா உரம் பெரும் போகப் பயிர்ச்செய்கைக்கு பாவிக்கப்படும் என இலங்கை தேசிய உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 13,000 மெற்றிக் தொன் யூரியா உரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதெனவும்...

இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம்காணப்பட்டார்

இலங்கையில் இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம் காணப்பட்டுள்ளார். இவரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த நபராவார். இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். ஏற்கனவே கடந்த வாரம் முதலாவது குரங்கு அம்மை நோயாளி இலங்கையில் இனம் காணப்பட்டிருந்தார். இவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img