ஆறு வருடங்களின் பின்னர் சந்திக்கும் சீன ஆஸி தலைவர்கள்

சீனா – ஆஸ்திரேலிய தலைவர்கள் ஆறு வருடங்களின் பின்னர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலியில் இடம்பெற்றுவரும் G20 மாநாட்டில் பங்குபெற வந்திருக்கும் சீன ஜனாதிபதி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் நேருக்கு நேர் சந்த்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த பெரும் இராஜதந்திர விரிசலிற்கு முடிவு கட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர விரிசலால், ஆஸ்திரேலியாவின் சீனாவிற்கான இரண்டு பில்லியன் டாலர்கள் பெறுமதியான வருடாந்த ஏற்றுமதியை சீன நிறுத்தியிருந்தது. இது ஆஸ்திரேலியாவிற்கு பாரிய பொருளாதார பின்னடைவாக இருந்து வருவதுடன், ஆஸ்திரேலியாவின் டொலரின் மதிப்பையும் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles