புதினம்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது

சீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குத்தகையின் பெறுமதி $1.12 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் முதற் கொடுப்பனவாக $292 மில்லியன் டாலர்களை அந்நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதென நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மிகுதிக் கொடுப்பனவுகள் வரும் ஆறு மாதங்களுக்குள் பெறப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார். 2010ம் ஆண்டு,...

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்தார் ஜனாதிபதி

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தகமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புகையிரத திணைக்கள தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுவந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தால் இலங்கையின் புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருதமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தியாவின் ஆதிக்கம்

​நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில், வட மாகாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை ஒற்றுமையின்றி மிகவும் குழப்பகரமாகவும், இழுபறி நிலையிலும் உள்ளது. ஒழுங்கான தலைமைத்துவம் இல்லாதது ஒரு பிரதான காரணமாக இருந்தாலும், வெளியுலக, குறிப்பாக இந்தியாவின் அழுத்தங்கள் அல்லது தலையீடுகள் வடபகுதி அரசியலில் பெரும் பங்கு வகிக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களின் அறிவுறுத்தல்கள்/வழிநடத்தலில் ஒற்றுமையாக விரும்பியோ, விரும்பாமலோ...

யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இம்முறை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இம்முறை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதென துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதில் முதலாவது தொகுதி நாளை (08/12) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு, கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பல பீடங்களையும் சேர்ந்த 816 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர். இரண்டாவது தொகுதி பட்டமளிப்பு விழா 2018ம் ஆண்டு மார்ச் மாதம்...

ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட்டின் எட்ஜ் உலாவி (Edge browser)

Edge browser : மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எட்ஜ் உலாவியை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் அலைபேசிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உலாவி, மிகவும் விரைவாக இணையத்தளங்களை லோட் (load) செய்கிறது. விண்டோஸ் 10 பாவனையாளர்கள் ஆண்ட்ராய்ட் அலைபேசிகளில் எட்ஜ் உலாவியை பாவிக்கும்போது, கணனியில் எட்ஜ் உலாவியில் பாவித்த தகவல்கள், கடவுச் சொற்கள் என்பன இலகுவாகவும்,...

லாஸ் ஏஞ்சல்ஸை நெருங்கும் கலிஃபோர்னியா காட்டுத்தீ

கடும் புகைமூட்டத்துடன் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீ, மிக வேகமாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள பெல்-ஏர் பகுதியில் பரவிவருகிறது. இவ் இடத்துக்கு அண்மையில் புராதன ரோமன் காலத்து சிலைகள் மற்றும் சித்திரங்களைக் கொண்ட கெட்டி (Getty) அருங்காட்சியகம் மற்றும் U.C.L.A பல்கலைக்கழகம் என்பன காணப்படுகின்றன. ​​புதன் கிழமைவரையில், 65,000 ஏக்கர் பரப்பளவில் எரிந்துகொண்டிருக்கும்...

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் – டொனால்ட் ட்ரம்ப்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விரைவில் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். நீண்ட காலமாக ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் உரிமை கொண்டாடிவரும் நிலையில், கடந்த அமெரிக்கத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த முடிவுகளை அறிவித்தார். வெள்ளை மாளிகையில்...

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி

​ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 442 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதில், S.மார்ஷ்...

டொனால்ட் ட்ரம்ப் விதித்த பயணத் தடை உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாட்டு மக்கள் அமெரிக்க வருவதற்கான தடையின் மீதான தடையை அமெரிக்க உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஈரான், லிபியா,சிரியா,ஏமன், சோமாலியா மற்றும் சாட் ஆகிய நாட்டு மக்கள் அமெரிக்கா வருவதற்கான தடையை டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்தார். இத்தடைக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றங்கள் விதித்திருந்த தடையினையே...

ஒகி புயலின் போது கடலுக்குள் சென்ற 2000 மீனவர்களின் நிலையென்ன?

​ஒகி புயலின் போது கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இந்திய கடற்படையினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ள 600 தமிழக மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப சகல உதவிகளையும் செய்வதாக குஜராத் அரசு உறுதியளித்துள்ளது. இன்னும் சில மீனவர்கள் மகாராஷ்டிரா, கேரளா,...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img