இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தகமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்கள தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுவந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தால் இலங்கையின் புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருதமை குறிப்பிடத்தக்கது.