ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 442 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில், S.மார்ஷ் 126 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஓவெர்ட்டன் மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

 

Shaun Marsh
(S.மார்ஷ் படம் : ESPN Cricinfo)

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் ஓவெர்ட்டன் 41 ஓட்டங்களைப் பெற்றார். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் லெயோன் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

Anderson இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் குடுக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஆண்டர்சன் ஐந்து விக்கட்டுக்களையும், வோக்ஸ் நான்கு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

 

இரண்டாவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் ரூட் 67 ஓட்டங்களைப் பெற்றார். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் ஸ்ட்ராக் ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்றரீதியில் முன்னிலை வகிக்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்க்சில் சதமடித்த ஆஸ்திரேலிய அணிவீரர் S.மார்ஷ் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது போட்டி டிசம்பர் 14ம் திகதி முதல் 18ம் திகதிவரை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் பெர்த் நகரில் நடைபெறவுள்ளது.

Latest articles

Similar articles