புதினம்

ஜனாதிபதி தென் கொரியா வியஜம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக தென் கொரியா பயணமாகியுள்ளார். பதினேழு பேர் அடங்கிய குழு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளது.  

இளவரசர் ஹரிக்கு திருமணம்

இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை மணமுடிக்கவுள்ளார். இத்தகவலை வேல்ஸ் இளவரசர் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் 2018 இளவேனிற்காலத்தில் இவர்களின் திருமணம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது. இதில், JM.வின்ஸ் 83 ஓட்டங்களையும், மாலன் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஸ்ராக் மற்றும் கமின்ஸ்...

மாவீரர் நாள் – கார்த்திகை 27

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.     பாடல் : விண் வரும் மேகங்கள் பாடும் பாடியவர் : சாந்தன் இசை : கண்ணன்

அறிமுகமாகிறது “Oppo F5 Youth”

ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள F5 Youth அலைபேசி செல்(f)பி பிரியர்களுக்கான ஓரளவு நியாய விலையில் கிடைக்கும் அலைபேசியாகும். இவ் அலைபேசியானது, செல்(f)பி பிரியர்களுக்கு ஏற்ற வகையில் திறன் கூடிய f/2.0 அப்பெச்சர் உடனான 16MP கமெராவைக் கொண்டுள்ளது. முழுமையான தரவுகளுக்கு இங்கே அழுத்தவும்.   விலை அண்ணளவாக USD.275

ஹாங்காங் ஓப்பன் பூப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஹாங்காங் ஓப்பன் பூப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். நேற்று (25) நடந்த அரையிறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த இன்டானோனை எதிர்கொண்ட சிந்து, 21-17, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இன்று (26) நடைபெறும் இறுதிப்போட்டியில், உலக பூப்பந்தாட்ட தரவரிசையில் முதலாவது...

நான்கு மாணவிகள் தற்கொலை, தலைமை ஆசிரியை உட்பட இருவர் தற்காலிக பணி நீக்கம்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே, பனப்பாக்கம் அரசு பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகளான தீபா, மனிஷா, சங்கரி மற்றும் ரேவதி ஆகியோர் கடந்த வெள்ளியன்று (24-11) பள்ளிக்கு அருகில் இருந்த 83 அடி ஆழக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். மாணவிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர்கள் கூறியதையடுத்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு...

​அகவை 63ல் தமிழீழ தேசியத் தலைவர்

தமிழரின் அடையாளம். தமிழரின் பெருமை. தன்னிகரில்லா தலைவன்.  

மத்திய பாரிஸ் நகரின் வீதிகளில் சுற்றித் திரிந்த புலி

மத்திய பாரிஸ் நகரின் வீதிகளில் சுற்றித் திரிந்த புலி ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. 200Kg நிறையுடைய இப்புலியானது சர்க்கஸ் ஒன்றிலிருந்து தப்பி, பாரிஸ் நகரின் வீதிகளில் சுற்றித் திரிந்துள்ளது. உடனடியாக வீதிப்போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சில நிமிடங்களின் பின்னர் அப்புலி சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சர்க்கஸ் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.  

தப்பி ஓடிய இலங்கை ராணுவ வீரர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பி சென்றவர்களுக்கு சட்ட ரீதியாக விலகிக் கொள்ள வழங்கப்பட்டிருந்த ஒரு மாத பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து, தப்பிச் சென்றுள்ள ராணுவத்தினரை கைது செய்வதற்கான நடவடிக்கை நேற்று (24-11) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 26,000 ராணுவ வீரர்கள் முறையாக கடமைகளை செய்யாமல் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ள நிலையில், ஒக்டோபர் 23ம் திகதி...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img