ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் நடைபெற் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது. இதில், JM.வின்ஸ் 83 ஓட்டங்களையும், மாலன் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஸ்ராக் மற்றும் கமின்ஸ் தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், அணித்தலைவர் ஸ்மித்தின் சிறப்பான துடுப்பாட்டத்தால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸ்மித் 141 ஓட்டங்களையும், S.மார்ஷ் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பிராட் மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

Steve Smith

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வெறும் 195 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் ரூட் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் ஸ்ராக், ஹசல்வூட் மற்றும் லியோன் தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் திலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்ப வீரர்களான வார்னர் மற்றும் பான்கிராப்ட் அசத்தலான ஆட்டத்தால் எவ்வித விக்கட் இழப்புமின்றி 173 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கட்டுக்களால்  வெற்றி பெற்றது.

Ashes series 2017
(படம் : ESPN Cricinfo)

முதல் போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்றரீதியில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கின்றது.

இரண்டாவது போட்டி டிசம்பர் 2ம் திகதி முதல் 6ம் திகதிவரை அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

Latest articles

Similar articles