தப்பி ஓடிய இலங்கை ராணுவ வீரர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பி சென்றவர்களுக்கு சட்ட ரீதியாக விலகிக் கொள்ள வழங்கப்பட்டிருந்த ஒரு மாத பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து, தப்பிச் சென்றுள்ள ராணுவத்தினரை கைது செய்வதற்கான நடவடிக்கை நேற்று (24-11) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 26,000 ராணுவ வீரர்கள் முறையாக கடமைகளை செய்யாமல் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ள நிலையில், ஒக்டோபர் 23ம் திகதி முதல், நவம்பர் 22 வரை வழங்கப்படட ஒரு மாத கால பொது மன்னிப்பு காலத்தில், சுமார் 11 ஆயிரம் ராணுவத்தினர் சட்டரீதியாக விலகிக் கொள்ள முன்வந்துள்ளனர்.

பொது மன்னிப்பு காலப் பகுதியை பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச் செல்லாதவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல்.ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles