ஆஸ்திரேலியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகர்களில் மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் விதித்த முடக்க நிலையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சிட்டினியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் காவல்துறையினர் மீது போத்தல்களை வீசினர். கலகத்தில் ஈடுபட்ட 57பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி 14% மக்களுக்கே வழங்கப்பட்டதுள்ளது. இது மிகவும் குறைந்தளவான வீதமாகும்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 13 மில்லியன் மக்கள் முடக்க நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles