இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இம்மாதம் முதல் இரண்டு நாட்களில் 512 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த மே மாதத்தில் மட்டும் 6,684 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
2022ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 24,717 டெங்கு நோயாளர்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு வைரசை பரப்பும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகும். டெங்கு நுளம்பு இனம் பெருகக்கூடிய இடங்களை இனம் கண்டு, சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
