2018ம் ஆண்டு வடக்கு கிழக்கில் டெங்கு தாக்கம் அதிகம்

கடந்த 2018ம் ஆண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4843 பேரும், யாழ் மாவட்டத்தில் 4058 பேரும் டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் அதிகம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் உள்ளது. இங்கு 10,261 டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, மட்டக்களப்பு , யாழ்ப்பாண மாவட்டங்களில்  டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே தெரிகிறது.

மாகாண சபைகள் இயங்காத நிலையிலுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில், புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாகும்.

Latest articles

Similar articles