ரணில் பிரதமராவது மக்களின் விருப்பமல்ல – அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதியும், ரணில் விக்ரமசிங்கவும் சட்டத்திற்கு மாறாக செய்யும் எதையுமே மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்ணனியின் (JVP) தலைவர் அனுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க ராஜபக்சகளின் காவலன், அவர் ஜனாதிபதியை நம்பலாம், ஜனாதிபதி ரணிலை நம்பலாம் ஆனால் அவரை பிரதமாராக்குவது மக்களின் விருப்பமல்ல என்றும் தெரிவித்த அனுர குமார திசாநாயக்க, இவர்களின் சூழ்ச்சியில் இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே கத்தோலிக்க மதத் தலைவர் ரஞ்சித் மல்கம் ஆண்டகையும், ஜாதிக ஹெல உறுமயவின் ஓமல்பே சோபித தேரரும் ரணில் பிரதமராவதை எதிர்த்திருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles