கத்தோலிக்கப் பேராயரும் ஜெனிவா சென்றார்

இலங்கையின் கத்தோலிக்க பேராயர் அதி வணக்கத்திற்குரிய மல்கம் ரஞ்சித் அவர்கள் ஜெனிவா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நேற்று (02/03) இலங்கை நேரப்படி பகல் 2.30 மணிக்கு ஜெனிவாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. பேராயர் ஏற்கனவே பரிசுத்த பாப்பரசரை வத்திக்கானில் சந்தித்து ஈஸ்ட்டர் தினத்தில் இடம்பெற்ற பேரவலத்திற்கு இலங்கை அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் உதாசீனம் செய்துவருவதை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2019ல் நன்கு திட்டமிடப்பட்டு கிறிஸ்தவர்களின் பெருநாளான ஈஸ்ட்டர் தினத்தில் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 260 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படிருந்தனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles