எமது ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பொறுப்பு – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சரத்பொன்சேகாவிற்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டை சுரண்டி, மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் முக்கிய பொறுப்பையே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு பலமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த கட்டமைப்பை அரசியல் யாப்பினூடாக ஒரு நிரந்தர கட்டமைப்பாக நிறுவி, நாட்டை எவரும் கொள்ளையிடமுடியாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

2015 ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசின் அமைச்சரவையில், சரத்பொன்சேகாவிற்கு சட்ட ஒழுங்கு அமைச்சு வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோதும், ரணில்-மைத்திரியின் கபடத்தனத்தால் அது நடக்காமல் போயிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles