இலங்கையில் கொரோனாவின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று(28/08) வெளியான தரவுகளின்படி 4,596பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை 27ம் திகதிக்கான தரவுகளின்படி, 103 பெண்கள் மற்றும் 109 ஆண்கள் உட்பட 212பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் முப்பது வயதிற்குட்பட்ட இருவர் உள்டங்குகின்றனர்.
மேலும் முப்பது வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 37 பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 173 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200 இற்கும் அதிகமாவே காணப்படுகின்றது. உள்ளுர் மக்களின் கருத்துப்படி உயிரிழப்பவர்களின் எண்ணிக்க அரசு வெளியிடும் தரவுகளை விட மிக அதிகம் என அறிய முடிகிறது. சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘அரசு வெளியிடும் தரவுகள் கேள்விக்குரியவையே’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.