மேலும் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ரணில் வேண்டுகோள்

நாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கும்படி இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். அதேபோல் மேலதிகமாக நீடிக்கப்படும் பொது முடக்கத்திற்கும் மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவார்கள் என ரணில் தெரிவித்துள்ளார்.

வேகமாகப் பரவிவரும் கொரோனாவினால் கடந்த 7ம் திகதியிலிருந்து இதுவரை 5,000பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனக்கு தெரிந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, ராஜா மகேந்திரன், வழக்கறிஞ்ஞர் கெளரி தவராசா உட்பட மேலும் பலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ரணில், கொரோனா தொடர்பான தரவுகள் கேள்விக்குரியவையாகவே உள்ளன. நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பது உண்மை. இருப்பினும் நாட்டை முடக்காமல் இருக்கும்போது ஏற்படும் பொருளாதர வீழ்ச்சி மிகவும் பாரதூரமானதாக இருக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest articles

Similar articles