இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோசித ராஜபக்ச தனக்கு எந்த ஒரு சுற்றுலா விடுதிகளும் சிங்கராஜ வனத்தில் இல்லை என மறுத்துள்ளார்.
அண்மையில் சூழலியலாளர் சஜீவ சமிகாரவினால் சிங்கராஜ வனத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதாவது வனத்தின் உட்பகுதியில் யோசித ராஜபக்ச சுற்றுலா விடுதி ஒன்றை நடத்துவதாகவும், அதற்கு வீதி அமைப்பதற்காக இவ் வனப்பகுதியினூடாக பாதை ஒன்றை இராணுவ உதவியுடன் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதே அந்த குற்றச்சாட்டு.
இது தொடர்பாக யோசித ராஜபக்சவின் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், சஜீவ சமிகாரவிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிதுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதை அமைக்கும் திட்டத்தை மறு அறிவித்தல்வரை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.