இலங்கையின் மருத்துவ சேவைக்கு உதவும் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மருத்துவத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவமனைகளில் அவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட பல நூற்றுக்கணக்கான மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைமைதான் காணப்படுவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி என்பன 30 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளன. இதன் மூலம் இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு வரும் மாதங்களில் தற்காலிகமாக நீங்கும் சாத்தியம் உண்டு.

Latest articles

Similar articles