களத்தில் அமெரிக்கா​. மகிந்தவை சந்தித்த அதிகாரிகள்

​இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவிற்கான தென் மற்றும் மத்திய ஆசிய உதவிச் செயலாளர் அலைஸ் வெல்ஸ் (Alice Wells) மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா (Alaina) ஆகியோர் இன்று (11/08) இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சசவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என இருதரப்பும் இதுவரை உத்தியோகரீதியாக அறிக்கை வெளியிடவில்லை.

மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பு சற்று முக்கியத்துவமிக்கதாக நோக்கப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles