அமெரிக்க – வட கொரிய அதிபர்களின் சந்திப்பின்போது கூர்க்கா படையினர் பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு வரும் 12ம் தேதி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின்போது பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் விதமாக சிங்கப்பூர் அரசு கூர்க்கா படையினரை களமிறக்குகின்றது.

இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் இடம், ஹோட்டல், மற்றும் சுற்று வீதிகளில் கூர்க்கா படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட கூர்க்காப்படையினர் சுமார், 200 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வருகின்றனர்.

இதேபோன்ற கூர்க்கா படையினர் 1987ம் ஆண்டு இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு பல இழப்புகளைச் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles