மரத்துப் போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேனா தட்டி எழுப்பி விட்டுள்ளார் – ராஜித சேனாரத்ன

மரத்துப் போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேனா தட்டி எழுப்பி விட்டுள்ளார் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (24/11) கண்டியில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய கூட்டம் ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு குறிப்பிட்ட சில விடயங்கள்,
ஜனாதிபதி ஐ.தே.க உடனான பயணத்தை இடைநிறுத்தியது (மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற) மனித கொலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த பின்னரா? அல்லது கொள்ளைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரா? இவை ஒன்றை கூட செய்யாது இன்று ஜனாதிபதி அவரது அறப் போராட்டத்தை காட்டி கொடுத்துள்ளார்.

மகிந்த ஏன் மாறினார் தெரியுமா? தனது உயிர் பாதுகாப்பிற்காக , தனது பின்ளைகளினதும் மனைவியினதும் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக.

தாஜூதின் படுகொலை செய்யப்படும் நாளில் கல்கிஸ்ஸை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவிற்கும் 46 தொலைபேசி அழைப்புக்கள் எங்கிருந்து சென்றது?
அவ் அழைப்புக்கள் அனைத்தும் அம்மணியின் அறையிலிருந்த தொலைப்பேசியிலிருந்து தான் சென்றுள்ளது. மகனின் கொலை குற்றங்களுக்கு தாயே துனை சென்றார். இவையனைத்தும் அறிந்து தான் அன்று வெளியேறினோம். உங்களோடு இனைந்தோம் என்று ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

—-

அக்டோபர் 26ம் திகதி மைத்திரிபால சிறிசேனா ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை, அரசியல் தந்திர நரியான ரணிலிற்கு, அவரது அரசியல் வாழ்க்கையில் விழுந்த பாரிய அடி என்பதை யாரும் மறுக்க முடியாது.

Latest articles

Similar articles