ஐ.தே.க தனித்து போட்டி

ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குவிற்கு அறிவித்துள்ளார்.

கடந்தவருடம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவினை இழுத்தடித்து, முழுமனமின்றி இறுதி நேரத்தில் வழங்கியிருந்த ரணில் விக்ரமசிங்க, இம்முறை தனித்துப் போட்டியிடுவதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சியை பலமற்ற கட்சியாக மாற்றுவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த பல தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்த ரணில், தொடர்த்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலமைப்பதவியினை தக்க வைத்துகொள்ளவதில் முழு கவணத்தையும் செலுத்திவருகிறார்.

தமிழ் தேசியக் கூட்டணி சஜித்தையா அல்லது ரணிலையா ஆத்ரிக்கப் போகின்றது என்பது இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த பிரதான கட்சிகள், சஜித் பிரேமதாச தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதால், ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னரைப்போன்று பெருமளவான வாக்குகளைப் பெறமுடியாது.

ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப்போட்டியிடுவதால், பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக சஜித் கூட்டணியின் வங்கியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தப்போகின்றது.

எனவே ரணிலின் தனித்துப்போட்டியிடும் இந்த முட்டாள்தனமான முடிவினால், பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதிப்படுத்தபடுவதாகவே கருத வேண்டியுள்ளது.

Latest articles

Similar articles