தமிழ் அரசியல்வாதிகளை நடுத்தெருவில் விட்ட ரணில்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று (18/12) பாராளுமன்றம் கூடியது. 

இதன்போது சபாநாயகர் கரு ஜெயசூரியா மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். இதன்மூலம் மூத்த அரசியல்வாதியான சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கை முப்பதிற்கு மேற்படாமல் இருக்கவேண்டும் என்பதால், ரணில் பாரிய நெருக்கடிகளை தனது கூட்டணிக்குள் எதிர்கொள்கின்றார். 

இதனால் சுயவிருப்பில் அமைச்சுப்பதவி பெறாமல் இருக்க முடியுமா என்று கூட்டணிக்குள் ரணில் கேட்டதனால், மனோ கணேசன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அமைச்சுப் பதவி பெறாமல் இருக்க சம்மதித்துள்ளதாக மனோ கணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியைத்தவிர ‘அமைச்சர்’, ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என சற்று பலமிக்க பதவிகளைக் கொண்டிருந்த தமிழர்கள், இனிமேல் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருக்கப்போகிறார்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே.ஆர். ஜெயவர்தனவிற்கு பின்னர் தந்திரமிக்க ஒரே ஒரு அரசியல்வாதி ரணில் விக்ரமசிங்க ஆவார். அவரின் தந்திரத்தினால் மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல, தமிழ் அரசியல்வாதிகளும் க்ளீன் போல்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Latest articles

Similar articles