இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை (07:00 PM IST) வெளியாகவில்லை.

உக்ரைன் இராணுவத்தின் தகவல்களின்படி, ரஷ்யாவின் ஆறு போர் விமானக்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மேலும் 50 ரஷ்ய படையினரை தாம் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ரஷ்ய இராணுவத்தின் தகவல்களின்படி, உக்கிரேனிய இராணுவத்தினரிடம் இருந்து தாம் எவ்வித பெரிய எதிர்ப்புகளையும் சந்திக்கவில்லை எனவும், எதிரிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு தப்பி ஓடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இரு நாட்டினரதும் இழப்புகள் தொடர்பான தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பினும், உக்கிரைனின் விமான ஓடு தளங்களை ரஷ்யாவின் ஏவுகணைகள் தாக்கியதால் அவை தீப்பிடித்து எரிகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் உக்கிரேனின் ஒரு சில இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள், தற்போது பல இடங்களில் இடம்பெறுகின்றமையும் இங்கே கவனிக்கப்படவேண்டியுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles