உக்ரைனின் அணு மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்து

தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவியுள்ளது.

ரஷ்யா மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலிலேயே இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரேனிய தரப்பினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த மின் உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பாக உள்ளது எனவும், அணுக்கதிர் வெளியேற்றம் எதுவும் இதுவரை இல்லை எனவும் பிராந்திய அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான அணு மின் நிலையத்தின் நிலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடென் மற்றும் சர்வதேச அணுசக்தி மேலாண்மை (IAEA) உயர் அதிகாரி ர(f)பாயல் குரோசி ஆகியோர் உக்ரேனிய ஜனாதிபதியின் அதிகாரிகளுடன் நேரடியாக தொலைபேசியில் பேசி, நிலவரங்களைத் தெரிந்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles